உள்ளடக்கத்துக்குச் செல்

இரவிவர்மன் தம்பி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இரயிமான் தம்பி
பிறப்புஇரவிவர்மன் தம்பி
1782 (1782)
கோட்டகோக்கம் கிழக்கே மாடம், கரமணை, திருவிதாங்கூர்
இறப்பு1856 (அகவை 73–74)
திருவிதாங்கூர்
பணிஇசைக்கலைஞர், கவிஞர்
அறியப்படுவதுகருநாடக இசை
குறிப்பிடத்தக்க படைப்புகள்
  • ஓமணத்திங்கள் கிடவோ
  • பிராண நாதன் எனிக்கு நல்கிய
  • கருணா செய்ய எந்து தாமசம்
பெற்றோர்
  • கேரள வர்மா தம்புரான்
  • பாருக்குட்டி தங்கச்சி
வாழ்க்கைத்
துணை
காளி பிள்ளை தங்கச்சி

இரவிவர்மன் தம்பி (Iravivarman Thampi) (1782-1856) இரயிமான் தம்பி என்றும் அழைக்கப்படும் இவர் ஒரு கர்நாடக இசைக்கலைஞரும், இசை அமைப்பாளரும் மற்றும் திருவிதாங்கூர் இராச்சியத்தைச் சேர்ந்த கவிஞருமாவார். சுவாதித் திருநாள் ராம வர்மனின் அரச சபையில் பாடல்களைப் பாடினார். இவரது இசையமைப்பில் மலையாளத்தின் மிகவும் பிரபலமான தாலாட்டுக்களில் ஒன்றான ஓமணத்திங்கள் கிடாவோ என்பதும் அடங்கும்.

சுயசரிதை

[தொகு]

இரயிமான் தம்பி, எனற தனது தாத்தாவின் பெயரான இரவிவர்மன் தம்பி என்றப் பெயரில், 1782 இல் பிறந்தார். [1] திருவிதாங்கூர், கரமனையில் உள்ள கோட்டக்ககம் கிழக்கே மாடம், சேர்த்தலையின் அரச குடும்பத்தைச் சேர்ந்த கேரள வர்மா தம்புரான், புதுமனை அம்மாவீடு தம்பி குடும்பத்தைச் சேர்ந்த பார்வதி பிள்ளை தங்கச்சி ஆகியோர் இவரது பெற்றோர் ஆவர். இவரது தாயார், இளவரசர் மகரம் திருநாள் ரவி மர்மாவின் மகளும், தர்ம ராஜாவின் அரசக் குடும்பத்தைச் சேர்ந்த மருமகளுமாவார். [2] [note 1] தம்பி, தனது பெற்றோரால் கிழக்கே மாடம் வீட்டில் வளர்க்கப்பட்டார். மேலும் இவரது தந்தையிடமிருந்து ஆரம்பக் கல்வி கற்றப் பிறகு, இலக்கணம், மொழியியல், சமசுகிருத இலக்கியங்களில் சங்கரன் இளையாத்து என்ற ஆசிரியரின் கீழ் பாடம் படித்தார். [3] இவர் தனது 14 வயதில் எழுதிய தனது முதல் கவிதையை திருவிதாங்கூரைச் சேர்ந்த கார்த்திகை திருநாள் தர்ம ராஜாவுக்கு அர்ப்பணித்தார். இது அவருக்கு திருவாங்கூர் நீதிமன்றத்தில் குறிப்பிடத்தக்க இடத்தைப் பெற்றது, [4] மேலும் பலராம வர்மா, சுவாதி திருநாள், உத்திரம் திருநாள், இரண்டு ராணிகள், கௌரி பார்வதி பாயி மற்றும் கௌரி லட்சுமி பாயி ஆகியோரின் ஆதரவையும் பெற்றது. [5]

இரயிமான் தம்பி தனது தாய் மாமா புதுமனை கிருட்டிணன் தம்பியின் மகள் காளி பிள்ளை தங்கச்சி என்பவரை மணந்தார். மேலும் இத்தம்பதியருக்கு லட்சுமி குட்டி பிள்ளை தங்கச்சி என்கிற குட்டி குஞ்சு தங்கச்சி (1820-1914) உட்பட ஏழு குழந்தைகள் இருந்தனர். லட்சுமி குட்டி பிள்ளை தனது தந்தையின் கலை மற்றும் கவிதை மரபுகளைத் தொடர்ந்தார். [note 2] [6] தம்பியின் மற்றொரு மகள் அருமனையைச் சேர்ந்த மகாராஜா விசாகம் திருநாளின் மகன் நாராயணன் தம்பியை மணந்தார். சுவாதித் திருநாள் ராம வர்மன் பிறந்தபோது 'ஓமணத்திங்கள் கிடாவோ' என்ற தாலாட்டு எழுதினார், இது மலையாள மொழியில் மிகவும் பிரபலமான தாலாட்டுக்களில் ஒன்றாக மாறியது.[7]

தம்பி 1856 இல் இறந்துவிட்டார் என்று நம்பப்படுகிறது. [note 3]

பங்களிப்புகள்

[தொகு]

தம்பியின் பங்களிப்புகள் ஆட்டகதைகள், கீர்த்தனங்கள், வர்ணங்கள் மற்றும் பாடங்கள் ஆகியவை உள்ளன. மேலும் அவை புத்தகங்களாக வெளியிடப்பட்டுள்ளன [8]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Biography on Kerala Sahitya Akademi portal". Kerala Sahitya Akademi portal. 2019-04-07. பார்க்கப்பட்ட நாள் 2019-04-07.
  2. 2.0 2.1 "Irayimman tampi's life history". www.carnatica.net. 2019-04-07. பார்க்கப்பட்ட நாள் 2019-04-07.
  3. 3.0 3.1 "Irayimman Thampi on Kerala Culture". www.keralaculture.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-04-07.
  4. "Gems of scholars of the royal court" (PDF). 2015-09-24. Archived from the original (PDF) on 2015-09-24. பார்க்கப்பட்ட நாள் 2019-04-07.
  5. "Composers and Musicians Irayimman Thampi (1782-1856)". www.swathithirunal.in. பார்க்கப்பட்ட நாள் 2019-04-07.
  6. "Kutty Kunju Thankachi". www.swathithirunal.in. பார்க்கப்பட்ட நாள் 2019-04-07.
  7. "Lullaby composed for Swathi: Omana Thingal". www.swathithirunal.in. பார்க்கப்பட்ட நாள் 2019-04-07.
  8. "List of works". Kerala Sahitya Akademi. 2019-04-07. பார்க்கப்பட்ட நாள் 2019-04-07.

குறிப்புகள்

[தொகு]
  1. Prince Makayiram Thirunal was the younger brother of Dharma Raja
  2. Some records say that Thampi had three children
  3. Records differ about the year of death of Thampi, the years 1855 (1031 ME)[3] and 1862[2] are also mentioned as the year of his death.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரவிவர்மன்_தம்பி&oldid=3005787" இலிருந்து மீள்விக்கப்பட்டது